முக்கிய செய்தி
இலங்கை வருகிறார் ஜப்பான் வெளிவிவகார அமைச்சர் !
ஜப்பான் வெளிவிவகார அமைச்சர் யொகோ கமிகவா இருநாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு எதிர்வரும் 4 ஆம் திகதி இலங்கைக்கு வருகைதரவிருப்பதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.நாட்டில் 4 – 5 ஆம் திகதிவரை தங்கியிருப்பதற்கு உத்தேசித்துள்ள அவர், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் பிரதமர் தினேஷ் குணவர்தன ஆகியோரை மரியாதை நிமித்தம் சந்திக்கவுள்ளார்.தொடர்ந்து ஜப்பானிய வெளிவிவகார அமைச்சர் யொகோ கமிகவா தலைமையிலான குழுவினர் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரியுடன் இருதரப்பு கலந்துரையாடல்களில் ஈடுபடவுள்ளனர்.இதன்போது இலங்கையின் பொருளாதார மீட்சிக்கான உதவிகள், கடன்மறுசீரமைப்பு செயன்முறையில் ஜப்பானின் ஒத்துழைப்பு, இருதரப்பு நல்லுறவை மேலும் வலுப்படுத்தல் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் விரிவாக ஆராயப்படுமென எதிர்பார்க்கப்படுகின்றது.