Connect with us

முக்கிய செய்தி

ஐக்கிய மக்கள் சக்தி இரண்டு மே தினக் கூட்டங்களை நடத்த தீர்மானம் !

Published

on

  ஐக்கிய மக்கள் சக்தி (SJB) இந்த ஆண்டு இரண்டு மே தின பேரணிகளை நடத்த உள்ளது, ஒரு பேரணி கொழும்பிலும் மற்றொன்று நுவரெலியாவிலும் நடத்தப்பட உள்ளது.பிரதான பேரணி கொழும்பி லும் மற்றைய பேரணி நுவரெலியாவிலும் நடைபெறவுள்ளதாக SJB தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார்.“நுவரெலியாவில் நடைபெறும் பேரணியை தமிழ் முற்போக்குக் கூட்டணி (TPA) ஏற்பாடு செய்ய உள்ளது, ஆனால் SJB தலைவர் இரண்டு பேரணிகளிலும் பங்கேற்பார்” என்று அத்தநாயக்க கூறியுள்ளார் .
கொழும்பு மேதின ஊர்வலம் குணசிங்கபுரத்தில் இருந்து மதியம் 1 மணிக்கு தொடங்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.