உள்நாட்டு செய்தி
இலவச அரிசியின் தரம் குறித்து ஆராய பணிப்புரை
அரசாங்கத்தினால் இலவசமாக விநியோகிக்கப்படும் அரிசி தரமற்றது எனவும், அவை விற்பனை செய்யப்படுவதாகவும் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் உடனடியாக விசாரணைகளை ஆரம்பிக்குமாறு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது. பொது நிர்வாக அமைச்சின் செயலாளரினால் மாவட்ட செயலாளர்களுக்கு இதற்கான அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. தற்போதைய பொருளாதார நெருக்கடியினால் பாதிக்கப்படக்கூடிய தரப்பினரை இலக்காக கொண்டு அரிசி நிவாரணம் வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. அதற்கமைய, நாடளாவிய ரீதியில் அரிசி விநியோகிக்கும் வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள நிலையில் இவ்வாறான குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.