முக்கிய செய்தி
சொகுசு வாகனங்களை தவிர்க்கும் பாராளுமன்ற உறுப்பினர்கள் !
பொருளாதாரச் சிக்கல்கள் காரணமாக, கிட்டத்தட்ட நாற்பது பாராளுமன்ற உறுப்பினர்கள் தங்களுடைய சொகுசு வாகனங்களை தவிர்த்து
சிறிய வாகனங்களை பயன்படுத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.அதிக எரிபொருள் விலை, சேவைக் கட்டணம், பராமரிப்புச் செலவுகள் போன்ற காரணங்களால் இவ்வாறு செய்துள்ளதாக தெரியவருகிறது. மேலும், அதிக எரிபொருள் செலவு காரணமாக, பாராளுமன்றக் கூட்டங்களில் பங்கேற்பது மற்றும் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்பது மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக தெரியவருகிறதுபல பாராளுமன்ற உறுப்பினர்கள் பேருந்துகள் மற்றும் ரயில்கள் போன்ற பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்த ஆசைப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது .