உள்நாட்டு செய்தி
கொழும்பில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட சந்தேகநபர் தப்பியோட்டம்

சட்ட வைத்தியரிடம் முன்னிலைப்படுத்துவதற்காக நான்கு பொலிஸ் உத்தியோகத்தர்களால் அழைத்துச் செல்லப்பட்ட சந்தேகநபர் தப்பிச் சென்றுள்ளதாக கொட்டாஞ்சேனை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
போதைப்பொருள் வழக்கு தொடர்பில் கைதுசெய்யப்பட்ட சந்தேகநரே இவ்வாறு தப்பிச்சென்றுள்ளதாக கூறப்படுகிறது.
கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர் கிராண்ட்பாஸ் பிரதேசத்தை சேர்ந்தவர் என பொலிஸார் கூறியுள்ளனர்.
போதைப்பொருள் வழக்கு தொடர்பில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சந்தேகநபரை மாளிகாகந்த நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதற்கு முன்னர் சட்ட வைத்தியரிடம் அழைத்துச் சென்ற போது சந்தேக நபர் தப்பிச் சென்றுள்ளதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.
இந்நிலையில் சந்தேகநபரை தேடும் பனி ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.