உள்நாட்டு செய்தி
14 மணிநேர நீர் வெட்டு
கொழும்பின் சில பகுதிகளுக்கு நாளை (27) சனிக்கிழமை 14 மணிநேர நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் என தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.இதன்படி நாளை சனிக்கிழமை மாலை 5 மணி முதல் ஞாயிற்றுக்கிழமை (28) காலை 7 மணி வரை குறித்த நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் எனவும் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.கொழும்பு 5 மற்றும் கொழும்பு 6, தெஹிவளை, கல்கிசை மற்றும் மொரட்டுவ நகர சபை பகுதிகளிலும், ஜயந்திபுர மற்றும் பெலவத்தை பிரதேசங்களிலும் இந்த நீர் வெட்டு அமுல்படுத்தப்படும்.