உள்நாட்டு செய்தி
மாலேயில் இருந்து கட்டுநாயக்கவிற்கு விமான சேவை
மாலைத்தீவில் இருந்து இலங்கை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலைத்திற்கான நேரடி விமான சேவையை Maldivian airlines ஆரம்பித்துள்ளது.மாலைத்தீவின் மாலே சர்வதேச விமான நிலையத்தில் இருந்து இலங்கை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலைத்திற்கான நேரடி விமான சேவை நேற்று (25) முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.Maldivian airlines சேவைக்கு சொந்தமான முதலாவது விமானம் நேற்றிரவு கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்கியது. Q2- 940 என்ற குறித்த விமானம் நேற்றிரவு 09.55 அளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்து. மாலைத்தீவு மற்றும் இலங்கைக்கு இடையிலான இந்த நேரடி விமான சேவை பிரதி வியாழன் மற்றும் சனிக்கிழமைகளில் முன்னெடுக்கப்படவுள்ளது. குறைந்த கட்டண விமான சேவையாக இயங்கும் இந்த சேவையில் M – 320 எயார் பஸ் வகை விமானம் பொருத்தப்பட்டுள்ளது.நேற்றிரவு வருகை தந்த விமானத்தில் மாலைத்தீவின் போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் கபிதான் மொஹமட் நாட்டிற்கு வருகை தந்தார். விமானத்தில் வந்த பயணிகளை கப்பல் துறை மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா வரவேற்றார்