உள்நாட்டு செய்தி
ஏ9 வீதியில் விபத்து – இராணுவ சிப்பாய் பலி ! 9 பேர் காயம் !

முல்லைத்தீவு – முறிகண்டி ஏ9 வீதியில் இன்று (26) காலை இடம்பெற்ற வாகன விபத்தில் இராணுவ சிப்பாய் ஒருவர் உயிரிழந்துள்ளார்.குறித்த விபத்தில் 9 பேர் காயமடைந்த நிலையில், சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்த லொறி ஒன்றும் முறிகண்டி பகுதியில் உள்ள இராணுவ முகாமிற்குச் சென்ற கெப் ரக வாகனமும் மோதுண்டதில் இந்த விபத்து நேர்ந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.விபத்தில் உயிரிழந்த 39 வயதுடைய இராணுவ சிப்பாயின் சடலம், கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.சம்பவம் தொடர்பில், மாங்குளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.