உள்நாட்டு செய்தி
தற்கொலை செய்து கொண்ட அதிபர்
குருநாகல் பிரதேசத்தை சேர்ந்த அதிபர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.குருநாகல், மாஸ்பொத்த பிரதேசத்தில் வசிக்கும் 55 வயதுடைய அதிபர் ஒருவரே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.அவர் குடியிருந்த வாடகை வீட்டிலேயே தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.மரணம் தொடர்பான மேலதிக விசாரணைகளை குருநாகல் பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.