உள்நாட்டு செய்தி
QR குறியீட்டுடன் கூடிய புதிய அடையாள அட்டை விரைவில் வழங்க நடவடிக்கை..!
தற்போது காணப்படும் தேசிய அடையாள அட்டையை விட சிறந்த தேசிய அடையாள அட்டை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார்.
இதற்காக ஒப்பந்தம் செய்யப்பட்டு, தற்போதுள்ள தேசிய அடையாள அட்டையில் இருந்த பார் குறியீடு நீக்கப்பட்டு,
இதற்கு பதிலாக கீயூ. ஆர் குறியீட்டுடன் கூடிய புதிய அடையாள அட்டை விரைவில் வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
நுவரெலியா ஆட்பதிவு திணைக்களத்தின் புதிய மத்திய மாகாண அலுவலகத்தை திறந்து வைத்து உரையாற்றும் போதே இதனை தெரிவித்துள்ளார்.
தேசிய அடையாள அட்டைகளை பெற்றுக்கொள்ள 340 இடங்கள் உள்ளதாகவும்,
ஆனால் அரசாங்கத்துக்கு நிதிப்பிரச்சினை காணப்படுவதாகவும் இருப்பினும் மக்களுக்காக நாடு முழுவதும் பல அலுவலகங்கள் திறக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.