உள்நாட்டு செய்தி
மீனவர் ஒருவர் தாக்கிக் கொலை – மின்னேரியா பகுதியில் அமைதியின்மை !
பொலன்னறுவை – மின்னேரியா பகுதியில் மீனவர் ஒருவர் தாக்கிக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தையடுத்து, குறித்த பகுதியில் அமைதியின்மை ஏற்பட்டுள்ளது.
மின்னேரியா நீர்த்தேக்கத்தில் தடைசெய்யப்பட்ட வலைகளை பயன்படுத்தி மீன்பிடிக்கும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்த மீனவர் ஒருவர் ஆயுதங்களால் தாக்கிக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் குறித்த நபரை கொலை செய்ததாக கூறப்படும் நபரின் வீடு மற்றும் சொத்துக்களுக்கு பிரதேச மக்கள் சேதம் விளைவித்ததையடுத்து அந்த பகுதியில் அமைதியின்மை ஏற்பட்டது.
இதனையடுத்து, பொலிஸாரின் தலையிட்டு நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளதுடன், சந்தேகநபர்களின் பிள்ளைகளையும் மின்னேரிய பொலிஸ் நிலையத்துக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மின்னேரியா பகுதியைச் சேர்ந்த 39 வயதுடைய நபர் ஒருவர் நேற்று பிற்பகல் மின்னேரியா நீர்த்தேக்கத்தின் கரையோரத்தில் வைத்து தாக்கிக் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்