உள்நாட்டு செய்தி
ஈரான் இஸ்லாமியக் குடியரசின் ஜனாதிபதி இலங்கை வருகை…!
ஈரான் இஸ்லாமியக் குடியரசின் ஜனாதிபதி கலாநிதி இப்ராஹிம் ரைசி (Dr.Ebrahim Raisi) உள்ளிட்ட தூதுக்குழுவினர் சற்று முன்னர் மத்தள சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்திருந்த நிலையில் அவர்களுக்கு, பிரதமர் தினேஷ் குணவர்தனவினால் வரவேற்பளிக்கப்பட்டது. ஈரான் ஜனாதிபதியின் ஒரு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தின் போது உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தித் திட்டம் திறந்து வைக்கப்படவுள்ளது.