Connect with us

முக்கிய செய்தி

ஹெலிகொப்டர்கள் 2, ஒன்றுடன் ஒன்று மோதி கோர விபத்து…!

Published

on

மலேசியாவில், அந்நாட்டு கடற்படையைச் சேர்ந்த இரண்டு ஹெலிகொப்டர்கள் ஒன்றுடன் ஒன்று மோதியதில் விபத்துக்குள்ளாகியுள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த விபத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஹெலிகொப்டர்களில் பயணம் செய்த அனைவரும் குறித்த விபத்தில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மலேசியாவில் இன்று மலேசியக் கடற்படையின் 90-ஆம் ஆண்டுக் கொண்டாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அதற்கான பயிற்சில் ஈடுபட்டிருந்தபோது இரண்டு ஹெலிகாப்டர்களும் ஒன்றுடன் ஒன்று மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மலேசியாவின் பேராக் மாநிலத்தில் லுமுட் சிறுநகரில் உள்ள கடற்படைத் தளத்துக்கு அருகே இந்த விபத்து ஏற்பட்டதாகத் மேலும் தெரிவிக்கப்படுகின்றது.