உள்நாட்டு செய்தி
வாகன விபத்தில் இளம் பெண் பலி
கந்தளாய் – ரஜஎல வீதியின் கிளை வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் யுவதி ஒருவர் உயிரிழந்தார்.நேற்று (21) காலை, கிளை வீதியில் பயணித்த வேன், சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து, வீதியை விட்டு விலகி, யுவதி மீது மோதியதாக பொலிஸார் தெரிவித்தனர்.விபத்தில் படுகாயமடைந்த யுவதி கந்தளாய் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்தார்.கந்தளாய் – ரஜஎல பிரதேசத்தில் வசித்து வந்த 19 வயதுடைய யுவதியே விபத்தில் மரணித்தார்.விபத்தின் பின்னர் சாரதி தப்பிச் சென்றுள்ளதுடன், சந்தேக நபரை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை கந்தளாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.