உள்நாட்டு செய்தி
தேசிய அடையாள அட்டை தொடர்பில் அறிவிப்பு..!
தேசிய அடையாள அட்டையைப் பெற்றுக்கொள்ள முடியாத 40 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு அடையாள அட்டை வழங்குவதற்கான கால அவகாசம் ஜூன் 30 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
பிறப்புச் சான்றிதழ் இல்லாத காரணத்தினால் இதுவரை அடையாள அட்டையை பெற்றுக்கொள்ள முடியாதவர்களுக்காகவே,
இந்த வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதாக ஆட்பதிவு ஆணையாளர் நாயகம் ஜி.பிரதீப் சபுதந்திரி தெரிவித்தார்.
மேலும் அடையாள அட்டை வழங்கும் நடவடிக்கை எதிர்வரும் மார்ச் மாதம் 31 ஆம் திகதி வரை அமுலில் இருக்கும் எனவும்,
பிரதேச செயலாளர்கள் காலத்தை நீடிக்குமாறு விடுத்த கோரிக்கைகளை கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும்,
ஆட்பதிவு ஆணையாளர் திணைக்களம் தெரிவித்துள்ளது.