உள்நாட்டு செய்தி
இந்தியாவிலிருந்து பெரிய வெங்காயத்தை இறக்குமதி செய்ய நடவடிக்கை…!
இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பெரிய வெங்காயத்தை லங்கா சதொச ஊடாக இறக்குமதி செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.இலங்கைக்கான பெரிய வெங்காயம் ஏற்றுமதி மீதான தடையை நீக்க இந்திய அரசாங்கம் தீர்மானித்துள்ள நிலையில், பத்தாயிரம் மெற்றிக் தொன் பெரிய வெங்காயத்தை இறக்குமதி செய்ய அண்மையில் தீர்மானிக்கப்பட்டதுடன், வெங்காயம் தனியாரிடமிருந்து இறக்குமதி செய்யப்படுமா என வர்த்தக மற்றும் நுகர்வோர் விவகார அமைச்சு கலந்துரையாடியுள்ளது.இந்நிலையில் லங்கா சதொச மூலம் இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்து விற்பனை செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.இதன்படி எதிர்வரும் இரண்டு வாரங்களில் ஆரம்ப கையிருப்பாக 2000 மெற்றிக் தொன் வெங்காயம் இறக்குமதி செய்யப்படும் என சதொச தலைவர் பசந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.