உள்நாட்டு செய்தி
சீகிரியா – தம்புள்ளையை வருட இறுதிக்குள் சுற்றுலா வலயங்களாக அபிவிருத்தி செய்ய திட்டம்!
சீகிரியா மற்றும் தம்புள்ளையை சுற்றுலா வலயங்களாக அபிவிருத்தி செய்யும் திட்டத்தின் ஆரம்பத் திட்டங்களை இந்த வருடத்தின் மூன்றாம் காலாண்டு முடிவதற்குள் நிறைவு செய்வதற்கு நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு திட்டமிட்டுள்ளது.
இந்த திட்டத்தை எளிதாக்குவதற்காக நிதி அமைச்சு குழுவொன்றையும் நியமித்துள்ளதுடன் 2019 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட இந்த திட்டம் கொவிட் தொற்றுநோய் மற்றும் பொருளாதார நெருக்கடி காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்தது. ஆசிய அபிவிருத்தி வங்கியின் ஆதரவுடன் செயல்படுத்தப்படும் இந்த திட்டத்துக்காக 30 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவிடப்பட்டுள்ளதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது.