உள்நாட்டு செய்தி
குழந்தைகளிடையே அதிகரித்து வரும் வயிற்றுப்போக்கு நோய்..!
புத்தாண்டுக்குப் பிறகு குழந்தைகளிடையே வயிற்றுப்போக்கு நோய் குறிப்பிடத்தக்க அளவில் காணப்படுகின்றதாக,
கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர் தெரிவித்துள்ளார்.
அடிக்கடி தண்ணீருடன் மலம் வெளியேறுதல், வயிற்று வலி அல்லது பிடிப்புகள், பசியின்மை, குமட்டல் மற்றும் வாந்தி ஆகியவை இந்த நோய்க்கான அறிகுறிகளாக காணப்படுகின்றன.
குறித்த அறிகுறிகள் காணப்பட்டால், பெற்றோர்கள் தங்களது குழந்தைகளைஉடனடியாக மருத்துவ சிகிச்சைக்கு அழைத்துச் செல்லுமாறு வலியுறுத்தப்பட்டுள்ளனர்.
மேலும் பெற்றோர்கள் அவர்களை வீட்டில் வைத்து அவர்களுக்கு ஓய்வு கொடுக்க வேண்டும் என வைத்தியர் தீபால் பெரேரா மேலும் தெரிவிக்கிறார்.