உள்நாட்டு செய்தி
போதைப் பொருளுடன் இரண்டு வெளிநாட்டுப் பெண்கள் கைது !

20 மில்லியன் ரூபா பெறுமதியுடைய கொக்கெய்ன் போதைப் பொருளுடன் இரண்டு வெளிநாட்டுப் பெண்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.சந்தேகநபர்கள் கொக்கெய்ன் போதைப்பொருள் அடங்கிய 40 மாத்திரைகளை விழுங்கிய நிலையில் கடத்தி வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.கைதான இருவரும் கினியா நாட்டை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.சந்தேகநபர்கள் இருவரும் மேலதிக விசாரணைகளுக்காக பொலிஸ் போதைப் பொருள் ஒழிப்பு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.