உள்நாட்டு செய்தி
நிதி ஸ்திரத்தன்மையில் இலங்கை முன்னேற்றம் – உலக வங்கியின் தெற்காசிய பிராந்திய உப தலைவர்
Digital News Team
உலக வங்கியின் தெற்காசிய பிராந்திய உப தலைவர் மார்ட்டின் ரைஸருக்கும் நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்கவிற்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.அமெரிக்காவின் வொஷிங்டனில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.பொருளாதார மீட்சி மற்றும் நிதித்துறையின் ஸ்திரத்தன்மை போன்றவற்றில் இலங்கை அடைந்து வரும் முன்னேற்றத்தைக் கண்டு மகிழ்ச்சியடைவதாக மார்ட்டின் ரைஸர் இங்கு கூறியுள்ளார்.வரி நிர்வாகம், நிதித்துறை, தனியார் முதலீடு மற்றும் வர்த்தகம், தொலைத்தொடர்பு, பெண்களை வலுவூட்டுதலுடன் சமூக பாதுகாப்பு ஆகிய துறைகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய மறுசீரமைப்புகள் குறித்தும் இங்கு விவாதிக்கப்பட்டுள்ளது.