உள்நாட்டு செய்தி
அரிசி ஏற்றிச்சென்ற லொறி விபத்து – இருவர் படுகாயம்
பதுளை, வெலிமட வீதியில் அடம்பிட்டிய வெல்லவெல பகுதியில் இன்று (19) காலை லொறியொன்று வீதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.அம்பாறையிலிருந்து வெலிமடை நோக்கி அரிசி ஏற்றிச் சென்ற குறித்த லொறியில் மூன்று பேர் பயணித்ததாகவும், சாரதிக்கு வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் லொறி கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இவ் விபத்து காரணமாக வீதியின் போக்குவரத்து ஒருவழி போக்குவரத்தாக மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.காயமடைந்தவர்கள் பதுளை போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும்
தெரிவித்துள்ளனர்.பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.