Connect with us

உள்நாட்டு செய்தி

பொலிஸாரின் விசேட அறிவிப்பு

Published

on

சுற்றுச்சூழல் குற்றங்கள் தொடர்பான தகவல்கள் ஏதும் இருப்பின் 1997 அல்லது 1981 என்ற அவசர தொலைபேசி இலக்கங்களுக்குத் தெரிவிக்குமாறு பொலிஸார் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளனர்.சுற்றாடல் அழிவு தொடர்பிலான சுற்றிவளைப்புகளை மேற்கொள்வதற்கு பொதுமக்களிடம் இருந்து பெறப்படும் தகவல்கள் மிகவும் முக்கியமானவை என்பதால் பொலிஸ் மா அதிபரால் இந்த தொலைபேசி இலக்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.ஆறுகளின் கரையோரங்களில் சட்டவிரோத சுரங்கங்கள், தொழிற்சாலைகளால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்பு மற்றும் வலி மாசுப்பாட்டால் வன விலங்குகளுக்கும் சுற்றுச்சூழலுக்கும் வலுவான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.சுற்றாடல் பாதிப்பு தொடர்பான சோதனைகளை மேற்கொள்வதற்காக பொலிஸ் விசேட பணியகத்தின் 1997 அவசர இலக்கமும், மத்திய சுற்றாடல் அதிகார சபையின் 1981 அவசர இலக்கமும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.உங்கள் பகுதியில் சுற்றுச்சூழலுக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் உடனடியாக மேற்குறிப்பிட்ட தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு அறிவிக்குமாறு கோரப்பட்டுள்ளது.