முக்கிய செய்தி
பாலித தெவரபெருமவின் மரணத்திற்கான காரணம் வெளியானது
மின்சாரத் தாக்குதலின் காரணமாக உடற்பாகங்கள் அனைத்தும் முற்றாக செயலிழிந்ததன் காரணமாகவே முன்னாள் பிரதி அமைச்சர் பாலித தெவரபெரும உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த பிரதி அமைச்சர் பாலித தெவரபெருமவின பிரேத பரிசோதனை அறிக்கையிலேயே இந்த விடயம் தெரியவந்துள்ளது.
முன்னாள் பிரதி அமைச்சர் பாலித தெவரபெரும நேற்று மதியம் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.
இந்த நிலையில், அவரின் இறுதிக் கிரியைகள் எதிர்வரும் வெள்ளிக்கிழமை இடம்பெறவுள்ளது.
அத்துடன், அவரது உடல் குடும்ப மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும் எனவும் அவருடைய குடும்பத்தார் தெரிவித்துள்ளனர்.