உள்நாட்டு செய்தி
இன்று முதல் இணைய வழி விசா முறை!
புதிய விசா முறையொன்றை நடைமுறைப்படுத்தல் மற்றும் புதிய இணைய வழிமுறையை செயற்படுத்தும் பணிகள் இன்று முதல் ஆரம்பிக்கப்பட உள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.அந்த திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
புதிய விசா நடைமுறை, அதற்கான கட்டணங்கள், பூர்த்திசெய்யப்பட வேண்டிய தேவைப்பாடுகள் மற்றும் இலங்கையில் தங்கியிருக்கக்கூடிய காலப்பகுதிகள் என்பன கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 27 ஆம் திகதி விசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் வெளியிடப்பட்டது.