Connect with us

முக்கிய செய்தி

இலங்கைக்கு சர்வதேச நாணய நிதியம் பாராட்டு

Published

on

 

பொருளாதார நெருக்கடியில் இருந்து, மீள்வதற்காக இலங்கை முன்னெடுத்து வரும் மறுசீரமைப்பு பணிகள் மற்றும் வேலைத்திட்டங்களுக்கு சர்வதேச நாணய நிதியம் பாராட்டு தெரிவித்துள்ளது.

நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்கவுக்கும், சர்வதேச நாணய நிதியத்தின் பிரதி முகாமைத்துவ பணிப்பாளருமான கென்ஜி ஒகமுரா உள்ளிட்ட குழுவினருக்கும் இடையில் நேற்று இடம்பெற்ற சந்திப்பின் போதே, இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் ஆரம்பமான சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கியின் அரையாண்டு மாநாட்டின் போது இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.