முக்கிய செய்தி
கல்வி அமைச்சின் முக்கிய அறிவிப்பு!
முஸ்லிம் பாடசாலைகளின் முதலாம் தவணையின் இரண்டாம் கட்ட கல்வி நடவடிக்கைகள் நாளை ஆரம்பமாகவுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.2024 ஆம் கல்வி ஆண்டுக்கான அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளின் முதலாம் தவணையின் முதற்கட்ட கல்வி நடவடிக்கைகள் நிறைவடைந்த நிலையில் கடந்த 10ஆம் திகதி விடுமுறை வழங்கப்பட்டது.இதையடுத்து, பாடசாலைகளின் முதலாம் தவணையின் இரண்டாம் கட்ட கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் 24ஆம் திகதி ஆரம்பமாகும் என அறிவிக்கப்பட்டது.இது அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளில் உள்ள சிங்கள மற்றும் தமிழ் பாடசாலைகளுக்கு பொருந்தும் எனவும் கல்வி அமைச்சு தெரிவித்திருந்தது.அதன்படி, முஸ்லிம் பாடசாலைகளின் முதலாம் தவணையின் இரண்டாம் கட்ட கல்வி நடவடிக்கைகள் நாளை ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது