உள்நாட்டு செய்தி
கார் மரத்துடன் மோதிய விபத்தில் தாயும் மகளும் உயிரிழப்பு

பதுளை – பண்டாரவளை பிரதான வீதியின் ஹாலி-எல பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் தாயும் மகளும் உயிரிழந்துள்ளனர்.காரொன்று மரத்தில் மோதி இந்த விபத்து சம்பவித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.விபத்தில் 71 வயதான தாயும் 51 வயதுடைய மகளும் உயிரிழந்துள்ளனர்.விபத்தில் படுகாயமடைந்த தந்தையும் மற்றுமொரு மகளும் பதுளை போதனா வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.கம்பஹா, தொம்பேயில் இருந்து உறவினர் வீட்டிற்கு சென்றவர்களே இந்த விபத்தைச் சந்தித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.