Connect with us

வானிலை

நாட்டின் பல பகுதிகளில் கடுமையான மின்னல் அபாயம்

Published

on

பலத்த மின்னல் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் இன்று (ஏப்ரல் 15) மாலை அல்லது இரவு வேளைகளில் சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என அது சுட்டிக்காட்டுகிறது.இடியுடன் கூடிய மழை பெய்யும் போது அந்த பகுதிகளில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.இதனால், மின்னல் தாக்கங்களில் பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்றுமாறு திணைக்களம் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *