உள்நாட்டு செய்தி
அதிவேக நெடுஞ்சாலையில் நேற்று 40 மில்லியன் ரூபாய் வருமானம்
அதிவேக நெடுஞ்சாலைகள் ஊடாக பயணித்த வாகனங்களின் மூலமாக நேற்றைய தினம் 40 மில்லியன் ரூபாய் வருமானமாக ஈட்டப்பட்டுள்ளது.வீதி அபிவிருத்தி அதிகார சபையின் நெடுஞ்சாலை பராமரிப்பு மற்றும் முகாமைத்துவ பிரிவின் பணிப்பாளர் ஆர்.ஏ.டி கஹடபிட்டிய இதனைத் தெரிவித்துள்ளார்.அதன்படி, கடந்த 10 ஆம் திகதி முதல் நேற்று வரை அதிவேக நெடுஞ்சாலைகளின் போக்குவரத்து மூலம் 191 மில்லியன் ரூபாய் வருமானமாக ஈட்டப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.அதேநேரம், கடந்த 10 ஆம் திகதி முதல் இதுவரையில் அதிவேக நெடுஞ்சாலைகளின் ஊடாக சுமார் ஐந்து இலட்சத்து 50 ஆயிரம் வாகனங்கள் பயணித்துள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபையின் நெடுஞ்சாலை பராமரிப்பு மற்றும் முகாமைத்துவ பிரிவின் பணிப்பாளர் ஆர்.ஏ.டி கஹடபிட்டிய தெரிவித்துள்ளார்.