உள்நாட்டு செய்தி
மின்னேரியா துப்பாக்கிச் சூட்டில் இளம்பெண் காயம்…!
மின்னேரியா கிரித்தலேயில் நேற்று இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் 17 வயது சிறுமி ஒருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சிறுமி தனது குடும்ப உறுப்பினர்களுடன் உறவினர் வீட்டுக்குச் சென்றிருந்த வேளையில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
சிறுமி படுகாயமடைந்து பொலன்னறுவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கிடைத்த தகவலையடுத்து மின்னேரிய பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்ததாக அவர்கள் தெரிவித்தனர்.
துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதற்கான காரணம் இதுவரை வெளியிடப்படவில்லை மற்றும் விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.