உள்நாட்டு செய்தி
24 மணித்தியாலத்தியத்துக்குள் 8 வீதி விபத்துக்கள்: 10 பேர் பலி!
கடந்த 24 மணித்தியாலத்திற்குள் 8 வீதி விபத்துக்கள் இடம்பெற்றுள்ளதாகவும் இந்த வீதி விபத்துக்கள் காரணமாக 10 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
பெரும்பாலான வீதி விபத்துக்கள் சாரதியின் கவனக்குறைவு காரணமாக இடம்பெறுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால், சாரதிகள் அனைவரும் போக்குவரத்து விதிமுறைகளைக் கடைப்பிடிக்குமாறு பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பிரதிப் பொலிஸ் மா அதிபருமான நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.