முக்கிய செய்தி
கொரோனா தொற்றில் பெண் ஒருவர் பலி
குருணாகல் போதனா வைத்தியசாலையில் கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குருணாகல் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே குறித்த பெண் திடீரென உயிரிழந்தார்
இதன்படி, உயிரிழந்த பெண்ணுக்கு PCR பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட நிலையில், அவர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளமை தெரியவந்துள்ளது.
சம்பவத்தில் குருணாகல் ரிதிகம பகுதியை சேர்ந்த பெண் ஒருவரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.