உள்நாட்டு செய்தி
மீண்டும் முட்டை இறக்குமதி !
உள்நாட்டில் மீண்டும் முட்டை விலை அதிகரிக்கும் பட்சத்தில், அரசாங்கம் இந்தியாவிலிருந்து மீண்டும் முட்டைகளை இறக்குமதி செய்யும் என வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
கடந்த சில நாட்களாக உள்நாட்டில் முட்டை விலை குறைவடைந்து காணப்பட்டது.
எனினும், தற்போது 50 ரூபாவுக்கு முட்டை விலையை உயர்த்தி வர்த்தகர்கள் விற்பனை செய்து வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு முட்டை விலை அதிகரிக்கும் பட்சத்தில் மீண்டும் இந்தியாவிலிருந்து அதிகளவான முட்டைகளை அரசாங்கம் இறக்குமதி செய்யும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.