உள்நாட்டு செய்தி
காய்ந்த மிளகாய் விலை 300 ரூபாவால் குறைப்பு !
பண்டிகைக் காலத்தை முன்னிட்டு லங்கா சதொச நிறுவனம் பல அத்தியாவசிய பொருட்களின் விலைகளை குறைத்துள்ளது.நேற்று(08) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த விலை குறைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.அதற்கமைய, ஒரு கிலோகிராம் காய்ந்த மிளகாய் 300 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 850 ரூபாவாகும்.சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் வெங்காயத்தின் விலை 120 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 375 ரூபாவாகும்.அத்துடன் இந்தியா மற்றும் பாகிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்யப்படும் வெங்காயத்தின் விலை 50 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 445 ரூபாவாகும்.ஒரு கிலோகிராம் வௌ்ளைப்பூண்டு 15 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது.ஒரு கிலோகிராம் உருளைக்கிழங்கு 10 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 165 ரூபாவாகும்.அத்துடன் சிவப்பு பருப்பின் விலையை 7 ரூபாவினாலும் வெள்ளை அரிசியின் விலையை 3 ரூபாவினாலும் குறைக்கவும் லங்கா சதொச நிறுவனம் தீர்மானித்துள்ளது.