முக்கிய செய்தி
இலங்கையில் இன்று ஷவ்வால் மாத தலைப்பிறை தென்பட்டது..!நாளை (புதன்) நோன்பு பெருநாள்..!
நோன்புப் பெருநாள் நாளை புதன் கிழமை கொண்டாடுவதாக கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவித்துள்ளது.
ஹிஜ்ரி 1445 புனித ஷவ்வால் மாத தலைப்பிறையை தீர்மானிக்கும் பிறைக்குழு மாநாடு இன்று மாலை மஹ்ரிப் தொழுகையை தொடர்ந்து கொழும்பு பெரிய பள்ளிவாசலில் இடம்பெற்றது.
இம்மாநாட்டில் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபை கொழும்பு பெரிய பள்ளிவாசல் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்கள உறுப்பினர்கள் மற்றும் உலமாக்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.
ஆகவே நாளை நோன்புப் பெருநாளைகொண்டாட தீர்மானித்துள்ளதாக கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவித்துள்ளது.