முக்கிய செய்தி
பள்ளிவாசல்களுக்கு சிறப்பு பாதுகாப்பு!
ரமழான் பண்டிகையை முன்னிட்டு இஸ்லாமிய பள்ளிவாசல்களின் பாதுகாப்பிற்காக பொலிஸாரால் சிறப்பு பாதுகாப்பு திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.பொலிஸ் மா அதிபர் தேஷ்பந்து தென்னகோனின் பணிப்புரைக்கமைய அமுல்படுத்தப்படும் இந்த வேலைத்திட்டத்திற்காக பொலிஸ், விசேட அதிரடிப்படை மற்றும் திரிவிட இராணுவ பாதுகாப்பு படையினர் அழைக்கப்பட்டுள்ளனர்.ஒவ்வொரு பொலிஸ் பிரிவிலும் உள்ள அனைத்து பள்ளிவாசல்களின் தலைவர்களை சந்தித்து சிறப்பு பாதுகாப்பு திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது .அதன் கீழ், நாடளாவிய ரீதியில் 2,453 பள்ளிவாசல்களுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன .இந்த பள்ளிவாசல்களின் பாதுகாப்பிற்காக 5,580 பொலிஸ் அதிகாரிகள், 510 சிறப்பு அதிரடிப்படை அதிகாரிகள் மற்றும் 1,260 இராணுவ வீரர்கள் உட்பட 7,350-க்கும் மேற்பட்ட பாதுகாப்பு படையினர் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.