உள்நாட்டு செய்தி
சுற்றுலாப் பயணிகளால் 1,025 மில்லியன் டொலர்கள் வருமானம்-சுற்றுலாத்துறை அமைச்சர்
2024ஆம் ஆண்டின் முதல் 3 மாதங்களில், 635,784 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக, சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
இதன் மூலம் 1,025 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வருமானமாக கிடைத்துள்ளன. 1 வருடத்தில் இலங்கைக்கு வருகை தந்த அதிகூடிய சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை, இந்த வருடத்தில் (2024) பதிவாக வாய்ப்புள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்
2018ஆம் ஆண்டு இலங்கைக்கு அதிகளவான சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாகவும், அந்த எண்ணிக்கை 23 இலட்சம் எனவும் சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ மேலும் தெரிவித்துள்ளார்.