உள்நாட்டு செய்தி
புத்தாண்டு தின்பண்டங்களின் விலை குறைப்பு..!
தமிழ் சிங்களப் புத்தாண்டுக்கான பாரம்பரியத்தின் பண்டங்களுக்கான செலவு 2023 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2024 ஆம்ஆண்டில் குறைந்துள்ளது.
ஆனால் 2019 ஆம் ஆண்டிலிருந்ததை விட தொடர்ந்தும் இரண்டு மடங்கு அதிகமாகவே உள்ளது.
இது பொருட்களுக்கான செலவு 2023 ஆம் ஆண்டை விட 2024 ஆம் ஆண்டில் 2 சதவீதத்தால் குறைந்துள்ளதைக் காட்டுகிறது.
2019 ஆம்ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2023 ஆம்ஆண்டில் செலவு 2.3 மடங்கு அதிகரித்திருந்தது. 2019 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2024 ஆம் ஆண்டில் இது சற்றுக் குறைந்து 2.2 மடங்காக உள்ளது.
செழுமை மற்றும் மகிழ்ச்சியைக் குறிக்கும் இலங்கையின் பாரம்பரிய இனிப்புகள் பல புத்தாண்டுக்கான தின்பண்டங்களில் இடம்பெறும்.
குடும்பங்களுக்கு இடையே இவற்றில் வித்தியாசங்கள் காணப்பட்டாலும், பாரம்பரிய புத்தாண்டு இனிப்புப் பண்டங்களில் பொதுவாக பாற்சோறு, கொக்கிஸ், வாழைப்பழம், அலுவா, பணியாரம், தொதல், பயத்தம் பணியாரம் மற்றும் பட்டர் கேக் ஆகியவை இடம்பிடிக்கும்.
இந்தப் பகுப்பாய்வில் பிரபல யூடியூப்சேனலான “அப்பேஅம்மா” சேனலில் உள்ள சமையல் குறிப்புகளின் அடிப்படையில், 4-5 நபர்களைக் கொண்ட குடும்பத்திற்குத் தேவையான அளவுகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
முக்கியமான பொருட்கள் மட்டுமே கணக்கிடப்பட்டுள்ளன, மின்சாரம், எரிவாயு மற்றும் மசாலாப் பொருட்களுக்கான செலவுகள் இதில் உள்ளடக்கப்படவில்லை.