உள்நாட்டு செய்தி
வறுமையில் வாடும் மக்களின் எண்ணிக்கை அதிகரிப்பு !
இலங்கையில் வறுமையில் வாடும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இலங்கையில் சுமார் 57 இலட்சத்து 77 ஆயிரம் பேர் வறுமையில் வாடுவதாக உலக வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள சமீபத்திய அறிக்கை கூறுவதாக பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளாதார மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களத்தின் பேராசிரியர் வசந்த அத்துகோரல தெரிவித்துள்ளார்.
அதிக பணவீக்கம், மக்களின் வருமானம் அதிகரிப்பு, வேலை இழப்பு மற்றும் வருமானம் வீழ்ச்சி போன்ற காரணங்களால் இவர்கள் வறுமையில் வாடுவதாக உலக வங்கி குறிப்பிடுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
குறைந்த நடுத்தர வருமானம் ஒரு நாளைக்கு 3.65 டொலர் என்ற வரம்பை கணக்கில் எடுத்துக்கொண்டு உலக வங்கி நடத்திய ஆய்வில் இந்தத் தகவல் தெரியவந்துள்ளது.
இதேவேளை , வறுமையில் வாடும் மக்களின் எண்ணிக்கை இந்த ஆண்டு இரண்டு இலட்சத்தாலும் , அடுத்த ஆண்டு மூன்று இலட்சத்தாலும் குறையும் என்று வங்கி கணித்துள்ளது.
இலங்கையின் அபிவிருத்தி முன்னேற்றம் தொடர்பாக உலக வங்கி வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.