உள்நாட்டு செய்தி
போலி தங்க நாணயங்களுடன் தாய், மகன் மற்றும் மகள் கைது !
பொலன்னறுவையில் புதையல் மூலம் கிடைத்த விலைமதிப்பற்ற தங்கக் காசுகள் எனக் கூறி 40 இலட்சம் ரூபா பெறுமதியான 810 போலி தங்க நாணயங்களை மனம்பிட்டிய உள்ள நபரொருவருக்கு விற்பனை செய்யச் சென்றவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.பொலன்னறுவை குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் நேற்று இரவு மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது ஒரே குடும்பத்தை சேர்ந்த தாய், மகள் மற்றும் மகன் ஆகியோர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.47, 23, 18 வயதுடைய தாய், மகள் மற்றும் மகன் ஆகியோரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.இவர்கள் போலி தங்க நாணயங்களுடன் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் தந்தை தப்பி சென்றுள்ளதாக பிரதேச குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.இந்த சோதனையின் போது தங்கக் காசுகள் எடை அளவிட பயன்படுத்தப்பட்ட தராசு மற்றும் 6 கையடக்கத் தொலைபேசிகளும் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.வங்கி முகாமையாளர் ஒருவருக்கு இதற்கு முன்னர் போலி தங்க நாணயங்கள் வழங்கி 20 இலட்சம் ரூபாவை பெற்றுள்ளதாக இந்த குடும்பத்தினர் மீது மெதிரிகிரிய பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளமையும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.