Connect with us

உள்நாட்டு செய்தி

முட்டை விலை 35 ரூபாவாக குறையும்

Published

on

ஏப்ரல் மாதத்தில் உள்ளுர் முட்டை ஒன்றின் விலை 35 ரூபாவாக கொண்டு வரப்படும் என விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
உள்ளூர் கோழி முட்டை உற்பத்தி மொத்த தினசரி தேவையை விட அதிகமாக இருப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.சராசரியாக இந்த நாட்டில் ஒரு நாளைக்கு 65 இலட்சம் முட்டைகள் தேவை . உள்ளூர் கோழிப்பண்ணைகளில் முட்டை உற்பத்தி ஏற்கனவே 75 இலட்சத்தை தாண்டியுள்ளதாக விவசாய அமைச்சு முட்டை உற்பத்தியாளர்கள் சங்கத்திற்கு அறிவித்துள்ளது.மேலும், இந்த நாட்டில் அனைத்து கோழிப் பண்ணைகளிலும் உள்ள தாய் விலங்குகளின் எண்ணிக்கை 135,000 ஐத் தாண்டியுள்ளதுடன், அனைத்து கோழிப் பண்ணைகளிலும் குஞ்சுகளின் கொள்ளளவு 100 வீதத்தால் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.
தற்போது சந்தையில் கோழி முட்டையின் விலை 45-50 ரூபாயாக உள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *