உள்நாட்டு செய்தி
வத்தளை துப்பாக்கிச் சூடு தொடர்பில் வெளியாகியுள்ள தகவல் !
வத்தளை சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்தில் பணியாற்றும் டெங்கு ஒழிப்பு அதிகாரியின் வீட்டிற்கு பிரவேசித்த துப்பாக்கிதாரிகளின் இலக்கு, அவரது சகோதரரின் மகனாக இருக்கக்கூடும் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.வெலிசறை மாபாகே பகுதியில் வத்தளை சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்தில் பணியாற்றும் டெங்கு ஒழிப்பு அதிகாரியை இலக்கு வைத்து, நேற்று ( 28 ) மோட்டார் சைக்கிளில் பிரவேசித்த இருவர் துப்பாக்கிப் பிரயோகம் நடத்த முற்பட்டிருந்தனர்.இதன்போது, துப்பாக்கிதாரியின் கையில் இருந்த துப்பாக்கி இயங்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது.இதனையடுத்து, அதிகாரி அருகில் இருந்தோரை பாதுகாப்பிற்காக வரவழைக்க முற்பட்ட போது, சந்தேகநபர்கள் தப்பிச்சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது.எவ்வாறாயினும், குறித்த டெங்கு ஒழிப்பு அதிகாரியின் சகோதரரின் மகனை இலக்கு வைப்பதற்காக அவர்கள் பிரவேசித்திருக்கக்கூடும் என விசாரணைகளின் போது, பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.அவ்வாறு பிரவேசித்தவர்கள் தொடர்பான தகவல்கள் இதுவரை கிடைக்கப்பெறவில்லை என்பதுடன், ஒப்பந்த அடிப்படையில் சந்தேகநபர்கள் இந்த குற்றச்செயல்களில் ஈடுபடுத்தப்பட்டிருப்பார்கள் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.சம்பவம் தொடர்பில் தொடர்ந்தும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.