உள்நாட்டு செய்தி
காயங்களுடன் பெண்ணின் சடலம் மீட்பு !
கடுவலை – கொத்தலாவல, பட்டியாவத்த வீதியிலுள்ள வீட்டில் காயங்களுடன், பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.51 வயதுடைய 2 பிள்ளைகளின் தாயாரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.நேற்று முன்தினம் (27) அவரது கணவர், மகள் மற்றும் மகன் ஆகியோர் காலையில் வேலைக்குச் சென்ற நிலையில், குறித்த பெண் வீட்டில் தனியாக இருந்துள்ளார்.இந்நிலையில் பெண்ணின் தலையின் பின்புறத்தில் பலத்த காயம் மற்றும் அவரது முகத்தில் கீறல்கள் இருந்ததாகவும், அவர் அணிந்திருந்த தங்க ஆபரணங்களும் காணாமல் போயுள்ளதாகவும், பொலிஸார் தெரிவித்துள்ளனர்.குறித்த பெண் வழமையாக முற்பகல் 11 மணியளவில் வேலைக்குச் செல்வதாகவும் பொலிஸாரின் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.வீட்டில் திருடுவதற்காக சென்ற யாரேனும் தாக்கியதானால், குறித்த பெண் உயிரிழந்திருக்கலாம் எனவும், பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்னர்.