முக்கிய செய்தி
தெற்காசியாவிலேயே மிகப் பெரிய மகப்பேற்று வைத்தியசாலை திறப்பு….!
இலங்கை மற்றும் தெற்காசியாவிலேயே மிகப் பெரிய மகப்பேற்று வைத்தியசாலையான காலி கராபிடியவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள ஜேர்மன் – இலங்கை நட்புறவு புதிய பெண்கள் வைத்தியசாலை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் இன்று காலை திறந்து வைக்கப்பட்டது.
640 படுக்கைகள், ஆறு சத்திர சிகிச்சை நிலையங்கள், அவசர சிகிச்சைப் பிரிவுகள், தீவிர சிகிச்சைப் பிரிவுகள் மற்றும் சிறுவர் சிகிச்சைப் பிரிவுகள் உள்ளிட்ட அதிநவீன வசதிகளுடன் கூடிய இந்த மருத்துவமனை, இலங்கையின் சுகாதாரப் சேவையின் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைப் பிரதிபலிக்கிறது. –