முக்கிய செய்தி
C.I.D.யிலிருந்து வெளியேறினார் மைத்திரிபால சிறிசேன !
வாக்குமூலம் வழங்குவதற்காக குற்றப் புலனாய்வு திணைக்களத்துக்குச் சென்றிருந்த முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தனது வாக்குமூலத்தை வழங்கிய பின்னர் அங்கிருந்து வெளியேறியுள்ளார்.உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால் சிறிசேன வெளியிடப்பட்ட சர்ச்சைக்குரிய கருத்து தொடர்பில் வாக்குமூலம் வழங்குமாறு குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் விடுக்கப்பட்ட அழைப்பையடுத்து அவர் இன்று திங்கட்கிழமை (25) அங்கு சென்று வாக்குமூலம் வழங்கினார்.இன்று காலை 10.30 மணியளவில் சாட்சியம் வழங்க அவர் குற்றப்புலனாய்வு பிரிவில் ஆஜராகியிருந்தார். விசாரணைகள் நிறைவடைந்ததையடுத்து பிரதான நுழைவாயிலில் வெளியேறாது மற்றுமொரு வழியே வெளியேறியுள்ளதாக கூறப்படுகின்றது.