முக்கிய செய்தி
இலங்கையில் மெக்டொனால்ட்ஸ் கிளைகள் அனைத்தும் மூடல்
இலங்கையில் மக்டொனால்ட்ஸ் உணவகத்தின் கிளைகள் அனைத்தும் மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளது.
அதற்கமைய, எதிர்வரும் ஏப்ரல் 4ஆம் திகதி வரை மக்டொனால்ட்ஸ் உணவகத்தின் 12 கிளைகள் மூடப்படும் என கொழும்பு வர்த்தக நீதிமன்றத்தினால் உத்தரவிடப்பட்டுள்ளது.
அத்துடன், அபான்ஸ் நிறுவனத்தின் பங்காளராக இருந்த மக்டொனால்ட்ஸ் நிறுவனம் அதிலிருந்து விலகியுள்ளது.
அபான்ஸ் நிறுவனம், இலங்கையில் அதனுடைய தரத்தை தக்க வைக்காததே இதற்கான காரணமாக கூறப்படுகின்றது.
ஆனால், இது தொடர்பில் மக்டொனால்ட்ஸ் நிறுவனத்திலிருந்தோ அதனை இலங்கையில் நடாத்தும் அபான்ஸ் நிறுவனத்திடமிருந்தோ எவ்வித தகவலும் கிடைக்கவில்லை.