உள்நாட்டு செய்தி
அரசாங்க தொழிற்சாலைகள் திணைக்களத்தில் பாரிய ஊழியர் வெற்றிடம்!
அரசாங்க தொழிற்சாலைகள் திணைக்களத்தில் பாரிய ஊழியர் வெற்றிடம் நிலவுவதாக தெரியவந்துள்ளது. நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் செயலாளர் டபிள்யூ.எஸ். சத்தியானந்த அண்மையில் கொலன்னாவையிலுள்ள அரசாங்க தொழிற்சாலைகள் திணைக்களத்துக்கு மேற்கொண்ட கண்காணிப்பு விஜயத்தின் போது இந்த விடயம் கண்டறியப்பட்டுள்ளது.
அரசாங்க தொழிற்சாலைகள் திணைக்களத்தின் அனுமதி பெற்ற அலுவலக ஊழியர்கள் 769ஆக இருந்த போதிலும், தற்போது 311 பேர் மட்டுமே பணிபுரிந்து வருவதாக தெரியவந்துள்ளது.எனவே, முகாமைத்துவ சேவைகள் திணைக்களத்திடம் கோரிக்கையை முன்வைத்து தேவைக்கு ஏற்ப ஊழியர்களை பணியமர்த்த நடவடிக்கை எடுக்கவுள்ளதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் செயலாளர் டபிள்யூ.எஸ். சத்தியானந்த தெரிவித்துள்ளார்.