முக்கிய செய்தி
மீண்டும் அதிகரிக்கும் மரக்கறிகளின் விலை
நாட்டில் மீண்டும் மரக்கறிகளின் விலை வேகமாக அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
நாரஹேன்பிட்ட பொருளாதார மத்திய நிலையத்தில் இன்று (23) மரக்கறிகளின் விலை அதிகரித்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
இதன்படி இன்று ஒரு கிலோகிராம் கரட் 240 ரூபாவாக பதிவாகியுள்ளது. அத்துடன் ஒரு கிலோகிராம் போஞ்சி 240 ரூபாவாக விற்பனை செய்யப்படுகின்றது.
இதேவேளை, ஒரு கிலோ பூசணிக்காய் 280 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகின்றத.
மேலும் ஒரு கிலோகிராம் பீட்ரூட் 280 ரூபாவுக்கும், கத்திரிக்காய் 360 ரூபாவுக்கும் விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.