உள்நாட்டு செய்தி
விபத்தில் 3 பிள்ளைகளின் தாய் பலி : மூவர் காயம் !
புத்தளம் – கொட்டுக்கச்சிய , கல்லகுளம் பகுதியில் நேற்று (22) இடம்பெற்ற விபத்தில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதுடன் மூவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.லொறியொன்றும், மோட்டார் சைக்கிள் ஒன்றும் மோதியதில் இவ் விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.புத்தளம் தள வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் தனது தந்தையை பார்ப்பதற்காக 3 பிள்ளைகளுடன் வருகைதந்த குறித்த பெண் லொறியுடன் மோதி விபத்துக்குள்ளானதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.விபத்தில் 43 வயதான மூன்று பிள்ளைகளின் தாயே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.குறித்த பெண்ணின் இரு பிள்ளைகள் மற்றும் லொறியின் சாரதி ஆகியோர் படுகாயமடைந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.