உள்நாட்டு செய்தி
ஆசிரியர் வெற்றிடங்களுக்கு பட்டதாரிகளை இணைத்துக் கொள்ள நடவடிக்கை…!
தென் மாகாணத்தில் உள்ள 3100 ஆசிரியர் வெற்றிடங்களுக்கு பட்டதாரிகளை இணைத்துக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என தென் மாகாண ஆளுநர் வில்லி கமகே தெரிவித்துள்ளார்.சமீபத்தில் நடந்த ஆசிரியர் தேர்வு முடிவுகளின் அடிப்படையில், விரைவில் நேர்காணல் நடத்தப்பட்டு, அடுத்த மாதம் ஆட்சேர்ப்பு நடத்தப்படும்.அதேவேளை, பிரதேச செயலக மட்டத்தில் வெற்றிடங்கள் உள்ள பாடசாலைகளுக்கு இவர்கள் நியமிக்கப்படவுள்ளதாக ஆளுநர் குறிப்பிட்டுள்ளார்.